இந்து முன்னணியினர் சூடம் ஏற்றி போராட்டம்

கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் சூடம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-25 16:34 GMT
திருவாரூர்:
கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் சூடம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூடம் ஏற்றி போராட்டம்
கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நோய் தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி திருவாரூர் தியாகராஜர் கோவில் மேற்கு கோபுர வாசலில் இந்து முன்னணியினர் சூடம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நகர தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோழமுருகன், நகர துணைத்தலைவர் நீலகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பழனியாண்டவர் கோவில், எல்லையம்மன் கோவில், கபாலீஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில் இந்து முன்னணி சார்பில் சூடம் ஏற்றும் போராட்டம் நடந்தது. அப்போது உடனடியாக கோவில்களை திறக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
திருத்துறைப்பூண்டி 
இதேபோல் திருத்துறைப்பூண்டி நகர ஒன்றிய இந்து முன்னணி சார்பில் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் வாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் மாதவன், மாவட்ட பொறுப்பாளர் சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக இந்து கோவில்களை திறந்து பக்தர்கள்  தரிசனத்திற்கு அனுமதி தர வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். 
வலங்கைமான்
வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் இந்து முன்னணி கட்சியின் சார்பில்  தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட இந்து முன்னணி கட்சி மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சிகாமணி, மாவட்ட பிரதிநிதி தர்மசாஸ்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவில்களை திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்