அணில் ஓடியதால் மின்கம்பி அறுந்து விழுந்தது
நாகையில், அணில் ஓடியதால் மின்கம்பி அறுந்து விழுந்தது.இதனால் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.;
நாகப்பட்டினம்:
நாகையில், அணில் ஓடியதால் மின்கம்பி அறுந்து விழுந்தது.இதனால் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
மின்கம்பி அறுந்து விழுந்தது
நாகை அருகே சாமந்தான்பேட்டையில் 55 மீட்டர் உயரழுத்த மின் கம்பி ஒன்று திடீரென அறுந்து விழுந்தது.இதனால் சாமந்தான் பேட்டை மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் மின் துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது தான் அணில் ஓடிய போது உரசியதால் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியவந்தது. மின் கம்பத்துக்கு அருகிலேயே அணில் ஒன்று இறந்து கிடந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து மின் துறை பணியாளர்கள் கூறும்போது:-
அணில் ஓடியதால் விபத்து
சாமந்தான்பேட்டை பகுதியில் நிறைய மரங்கள் உள்ளன. மரங்களுக்கு அருகில் மின்கம்பங்கள் உள்ளதால் ஏராளமான பறவைகளும், அணில்களும் அதன் மீது ஏறி கடந்து செல்கின்றன. இவைகள் மின்கம்பங்கள் மீது ஏறி ஓடும் போது மின்கம்பங்கள் உரசுவதால் அறுந்து விழும் சம்பவங்களும் நடந்து வருகிறது. அப்படித்தான் இன்று (நேற்று) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உயரழுத்த மின்கம்பியில் அணில் சென்ற போது அதன் வாய்ப்பகுதி இன்சுலேட்டரிலும் (பீங்கான்), வால் பகுதி கம்பத்திலும் உரசியதால் இன்சுலேட்டர் வெடித்துள்ளது. இதனால் மின்கம்பியின் ஒரு பகுதி அறுந்து விழுந்துள்ளது. மின்சாரம் தாக்கி அணிலும் இறந்திருக்கிறது. மின்கம்பி அறுந்ததால் மின்தடை ஏற்பட்டுள்ளது. தற்போது மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டு மின்வினியோகம் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.