எட்டயபுரத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எட்டயபுரத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
எட்டயபுரம்:
எட்டயபுரம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எட்டயபுரம் தாலுகா சோழபுரம் குறுவட்டம் லக்கமாதேவி, குமரி குளம், விகாம்பட்டி, ஆத்தி கிணறு உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களை போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து மோசடி நடந்துள்ளதாக கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகா செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் செல்வகுமார், நடராஜன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.