பழவேற்காடு பக்கிங்காம் கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் பிணம் போலீசார் விசாரணை
பழவேற்காடு பக்கிங்காம் கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி,
பொன்னேரி அருகே பழவேற்காடு ஏரிகரை அருகில் கரி மணல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியாக பக்கிங்காம் கால்வாய் செல்கிறது.
இந்த கால்வாயில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்ததாக திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றினர். கை, கால்கள் மீன்பிடி வலையின் கயிற்றால் கட்டப்பட்டு இருந்ததை பார்த்தனர். போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை கொலை செய்து கை, கால்களை கட்டி பக்கிங்காம் கால்வாயில் வீசி சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.