திருவள்ளூர் அருகே வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

திருவள்ளூர் அருகே வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-25 05:08 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் எழில் நகரை சேர்ந்தவர் முரளி. இவரது மகன் சூர்யா (வயது 23). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் வெண்மனம்புதூர் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குயிலுக்குப்பம் பகுதியை சேர்ந்த ஜெகன் (வயது 21) மற்றும் அவரது நண்பர்களான விக்ரமன் என்கிற அப்பு (வயது 22) மற்றும் சில நபர்களுடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மேற்கண்ட 4 பேரும் சூர்யாவை வழி மறித்து அவரை கிரிக்கெட் மட்டையாலும், பீர் பாட்டில்களாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சூர்யா சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிப்பபட்டார். இதுகுறித்து அவர் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து ஜெகன், விக்ரமன் என்கிற அப்பு ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்