விஷம் குடித்து பூ வியாபாரி தற்கொலை
கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு, விஷம் குடித்து பூ வியாபாரி தற்கொலை செய்துகொண்டனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ளது பாஞ்சாலை கிராமம். இங்கு வசித்து வந்தவர் பாபு (வயது 53). பூ வியாபாரி. இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் தனது மகன் பொறுப்பு இல்லாமல் இருப்பதை கண்டு மனஉளைச்சலில் இருந்து வந்த பாபு, நேற்று முன்தினம் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கவலைக்கிடமான நிலையில் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.