பெண்கள், குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்படும். ரவுடிகள் கொட்டம் அடக்கப்படும். குற்றங்களை தடுக்க போலீசார் ரோந்துப்பணியில் 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்படுவர். பெண்கள், குழந்தைகளிடம் தவறாக நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கந்துவட்டி குறித்து புகார் இருந்தால் தைரியமாக அந்தந்த போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவிக்கலாம். போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிருத்துபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும். பொதுமக்கள் போலீஸ்துறைக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு சமம். மேலும் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கள்ளச்சாராயம் உள்ளிட்ட புகார்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 044- 27236111, தனிப்பிரிவு அலுவலக தொலைபேசி எண்- 044- 27238001 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். புகார் அளிப்பவர்களின் தகவல்கள் அனைத்தும் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.