கண்ணதாசன் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

பிறந்த நாளையொட்டி கண்ணதாசன் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;

Update:2021-06-25 02:50 IST
காரைக்குடி,

கவியரசு கண்ணதாசனின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள கவியரசர் கண்ணதாசன் மணி மண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மணிமண்டபத்தை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கவிஞர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் உள்ள நூலகம் பராமரிப்பு காரணமாக அதன் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் சீரமைக்கப்பட்டு செயல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் இங்கு கூட்ட அரங்கு உள்ளதால், தமிழ்நாடு அரசு பணிக்கான போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.
 இவ்வாறு அவர் கூறினார்.  
நிகழ்ச்சியில் தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், கவியரசு கண்ணதாசன் மகள் விசாலாட்சி கண்ணதாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் சந்தோஷ், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் நாகராஜ், தாசில்தார் அந்தோணிராஜ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார்.கவியரசு கண்ணதாசன்நற்பணி மன்ற தலைவர் டாக்டர் சுரேந்திரன், செயலாளர் மக்கள் கவிஞர் அரு. நாகப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்