ஈரோடு மாநகராட்சியில் 20 வார்டுகளுக்கு உள்பட்ட 2 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

ஈரோடு மாநகராட்சியில் 20 வார்டுகளுக்கு உள்பட்ட 2 ஆயிரம் பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-06-24 21:19 GMT
ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில் 20 வார்டுகளுக்கு உள்பட்ட 2 ஆயிரம் பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சுழற்சி முறையில்
ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளில் 3 நாட்களுக்கு சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் 20 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி மையங்களில் நீண்ட நேரமாக காத்திருப்பதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி நேற்று ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சூரியம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ஜவுளி நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பெருமாள் மலைப்பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, இந்திராபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பூம்புகார் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, ஈஸ்வரன் கோவில் அருகே காமராஜர் வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
2 ஆயிரம் பேர்
மேலும் வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானம், கனியன் வீதியிலுள்ள நாடார் சமுதாய கூடம், கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப்பள்ளி, வில்லரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வீரப்பம்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, காரபாறை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ரங்கம்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பழைய பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வளையக்கார வீதி மாநகராட்சி பள்ளி, பெரிய மாரியம்மன் கோவில் வீதி மாநகராட்சி பள்ளி, டிவைன் பள்ளி, பெரிய மாரியம்மன் கோவில் வீதி பள்ளி, மோளக்கவுண்டன்பாளையம் மாநகராட்சி பள்ளியிலும் நேற்று பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அந்தந்த பகுதியில் உள்ள தடுப்பு மையங்களில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு வார்டு பகுதியிலும் 100 பேர் வீதம் மாநகர் பகுதியில் 2 ஆயிரம் பேருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) மாநகர் பகுதியில் மேலும் 20 வார்டுகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.

மேலும் செய்திகள்