ஏர்வாடி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
ஏர்வாடி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அண்ணன் புகார் கொடுத்து உள்ளார்.
ஏர்வாடி:
ஏர்வாடி அருகே உள்ள பொத்தையடி மாதாங்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி மகன் ஜெயராஜ். இவருக்கும், பணகுடி அருகே உள்ள ஸ்ரீரெகுநாதபுரம் வடக்கு நாராயணசுவாமி கோவில் தெருவை சேர்ந்த பால்பாண்டி மகள் பத்மா (வயது 24) என்பவருக்கும் கடந்த 25.3.2016 அன்று திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஸ்ரீவித்யா என்ற மகள் உள்ளார். தற்போது பத்மா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் ஜெயராஜ்க்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பத்மா தனது அண்ணன் லட்சுமணனிடம் கூறி வந்துள்ளார்.
இதற்கிடையே கடந்த 19-ந்தேதி இரவு பத்மா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பத்மாவின் அண்ணன் லட்சுமணன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதில் தனது தங்கை சாவில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். இந்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்சன் வழக்குப்பதிவு செய்தார். நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீலிசா ஸ்டெபலா தெரஸ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.