ஆற்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

ஆற்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.;

Update: 2021-06-24 19:35 GMT
ஆற்காடு,

ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 45). லாரி கிளீனராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 20-ந் தேதி தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிக்கொண்டு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பனையூர் கிராமத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

பின்னர் நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு வந்தார்.  முன்பக்க கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றபோது, பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 3½ பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பூபாலன் ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்