கோவில்களை திறக்க வலியுறுத்தி விளக்கேற்றும் போராட்டம்

கோவில்களை திறக்க வலியுறுத்தி விளக்கேற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.

Update: 2021-06-24 19:26 GMT
பெரம்பலூர்:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும், இன்னும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படாததால், அவை மூடப்பட்டு காட்சியளிக்கின்றன. இந்நிலையில் வழிபாட்டு தலமான கோவில்களை திறக்க அரசை வலியுறுத்தி பெரம்பலூரில் நேற்று இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் நூதன போராட்டமாக விளக்கேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு இயக்கத்தின் மாவட்ட தலைவர் மயூரப்பிரியன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோவிலின் முன்பு கையில் விளக்கேற்றி நின்று தமிழகத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தினர். பின்னர் அவர்கள் கோவில் முன்பு விளக்கேற்றி வைத்தனர்.

மேலும் செய்திகள்