நிலக்கோட்டை அருகே பெரியாறு கால்வாயில் மூழ்கி பெண் பலி

நிலக்கோட்டை அருகே பெரியாறு கால்வாயில் மூழ்கி பெண் பரிதாபமாக இறந்துபோனார்.;

Update: 2021-06-24 19:04 GMT
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள சின்னுபட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி மனைவி நாகு (வயது 55). இவர் நேற்று காலை கூட்டத்து அய்யம்பாளையத்தில் உள்ள தோட்டத்தில் வாழை மட்டைகளை அறுப்பதற்காக சென்றார். அப்போது அங்குள்ள பெரியாறு கால்வாயில் இறங்கி கடந்து செல்ல முயன்றார். இதில், கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நாகு நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று, கால்வாயில் மூழ்கிய நாகுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்