1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-06-24 19:00 GMT
குளச்சல், ஜூன்:
குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு குளச்சல் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட ஒரு டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1,200 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மூடைகளை கேரளாவுக்கு கடத்த முயற்சித்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் டெம்போ டிரைவரான கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 31), உதவியாளர் ரெஜி (35) ஆகியோரை பிடித்து, அரிசியையும் டெம்போவையும் பறிமுதல் செய்து மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியிடம் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்