தடுப்பூசிக்கு முறையான டோக்கன் வழங்காததை கண்டித்து முற்றுகை

தடுப்பூசிக்கு முறையான டோக்கன் வழங்காததை கண்டித்து முற்றுகை நடந்தது.

Update: 2021-06-24 18:59 GMT
நொய்யல்
கரூர் மாவட்டம், நடையனூர் அருகே கரைப்பாளையம் ஆலமரத்துமேட்டில் உள்ள அரசு பள்ளிக்கு முதலில் வரும் 400 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்படும் என சுகாதாரத்துறையினர் அறிவித்தனர். இதனால் நேற்று அதிகாலையில் இருந்து தடுப்பூசி போடுவதற்கு ஏராளமானவர்கள் குவிந்தனர். இதையடுத்து தடுப்பூசி போடுவதற்கு டோக்கன் பெற்றவர்களும், டோக்கன் இல்லாமலும் ஏராளமானவர்கள் வரிசையில் நின்றனர். பின்னர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதில், டோக்கன் பெற்றிருந்த சிலர் மதியத்திற்கு பிறகு வர இருந்ததால், டோக்கன் இல்லாமல் வந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தடுப்பூசி போடுவதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து தடுப்பூசி முகாமில் முறையான டோக்கன் வழங்காததை கண்டித்து, அங்கிருந்தவர்கள் முகாமை முற்றுகையிட்டு சுகாதார பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து  தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்