கொரோனா நிவாரண நிதியாக பார்வையற்ற ஆசிரியர் ரூ.50 ஆயிரம் வழங்கல்

கொரோனா நிவாரண நிதியாக பார்வையற்ற ஆசிரியர் ரூ.50 ஆயிரம் வழங்கினார்;

Update: 2021-06-24 18:45 GMT
கரூர்
முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகிறார்கள். இதன் ஒருபகுதியாக நேற்று கரூர் செல்லாண்டி பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் பார்வையற்ற ஆசிரியர் நாகராஜன் தனது சொந்த பணத்தில் இருந்து முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை சக ஆசிரியர்களிடம் வழங்கினார். இந்த பணம் கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்