பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2021-06-24 18:43 GMT
கிருஷ்ணராயபுரம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே வீரராக்கியம், புலியூர் பகுதியில் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2 மாதங்களுக்கு பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த சாலை கோவை முதல் சென்னை வரை இணைக்கும் முக்கிய சாலையாக அமைந்துள்ளது. இந்த பாலப்பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால் பஸ், லாரி போன்ற வாகனங்கள் அனைத்தும் பைபாஸ் வழியாக சுற்றி புலியூர் வந்து செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் வழி தெரியாமல் தடுமாறுகின்றனர். எனவே பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்