மேட்டுப்பாளையத்தில் ஆதரவற்றோர் பராமரிப்பு மையத்தில் கலெக்டர் ஆய்வு
மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆதரவற்றோர் பராமரிப்பு மையத்தில் கலெக்டர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆதரவற்றோர் பராமரிப்பு மையத்தில் கலெக்டர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆதரவற்றோர் பராமரிப்பு மையம்
மேட்டுப்பாளையம் பழைய நகராட்சி அலுவலகத்தில் ஆதரவற்றோர் மீட்பு மற்றும் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 9 பெண்கள் 6 ஆண்கள் என 15 பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த மையத்துக்கு கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் திடீரென்று வந்தார். பிறகு அந்த மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு பராமரிக்கப் பட்டு வருபவர்களிடம் போதிய வசதிகள் உள்ளதா? உணவுகள் சரியாக வழங்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கைத்தொழில்
கோவை மாவட்டத்தில் ஆதரவற்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் அனைத்து மருத்துவ பரிசோதனை களும் செய்த பின்னர் மையத்தில் தங்க வைக்கப்படுகின்றனர்.
அவர் களின் உடல்நிலை சீரடைந்ததும், அவர்களுக்கு கைத்தொழிலும் கற்றுக் கொடுக்கப்படும்.
உடல் நிலை சீரடைந்த பின்னர், அவர்களின் உறவினர் களை கண்டறிந்து, அவர்களுக்கு விருப்பம் இருந்தால் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த மையத்தை இன்னும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மார்க்கெட்டில் ஆய்வு
இந்த ஆய்வின்போது கலெக்டருடன் தாசில்தார் ஷர்மிளா, மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், நகராட்சி ஆணையர் கவிதா, அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அதிகாரி கண்ணன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உள்ள உருளைக் கிழங்கு மண்டிகளுக்கு சென்ற கலெக்டர், அங்கு ஆய்வு செய்ததுடன், கொரோனா பரிசோதனை மேற்கொள்வதையும் அவர் பார்வை யிட்டார்.
72 மனுக்கள்
மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், காரமடை உள்வட்டத்தை சேர்ந்த பொது மக்கள் ஆன்லைன் மூலம் 72 மனுக்களை அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தாலுகா அலுவலகம் வந்த கலெக்டர், பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உத்தரவு ஆகியவற்றை வழங்கினார். இதில் மாவட்ட வழங்கல் அதிகாரி குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.