தர்மபுரி மாவட்டத்தில் புதிய உச்சம்: பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டது

தர்மபுரி மாவட்டத்தில் புதிய உச்சமாக பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டது.

Update: 2021-06-24 17:56 GMT
தர்மபுரி:
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் நேற்று புதிய உச்சமாக பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.100-ஐ தொட்டது. நேற்று மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.11 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.88 ஆக இருந்தது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் தர்மபுரி மாவட்டத்தில் ரூ.97.28 என்ற விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தர்மபுரி மாவட்டத்தில் அதிகபட்சமாக ரூ.87.66  என்ற விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையானது. கடந்த 6 மாதங்களில் தர்மபுரி மாவட்டத்தில் பெட்ரோல் விலை படிப்படியாக அதிகரித்து உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருந்த விலையை ஒப்பிடும்போது தற்போது பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.13 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்