கணியனூர் ரேஷன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு

கணியனூர் ரேஷன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு;

Update: 2021-06-24 17:51 GMT
கலவை

கலவை தாலுகா உள்ள கணியனூரில் உள்ள ரேஷன் கடையில் அரசு வழங்கும் கொரோனா நிவாரணத் தொகை, 14 வகையான மளிகை பொருட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கணியனூர் ரேஷன் கடையில் கலெக்டர்  கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் திடீரென ஆய்வு செய்தார். அப்போது  ரேஷன் கடையின் இருப்பு பதிவேடுகளை சரிபார்த்து ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு சமூக இடைவெளியுடன் பொருட்களை வழங்க விற்பனையாளருக்கு அறிவுறை வழங்கினார். 

கலவை தாசில்தார் நடராஜன், துணை தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி, கிராம அதிகாரி ஸ்ரீதர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்