லாரி மீது ஸ்கூட்டர் மோதல்- கார் டிரைவர் பலி

திருவெண்காட்டில் லாரி மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் கார் டிரைவர் பலியானார்.

Update: 2021-06-24 17:48 GMT
திருவெண்காடு:
திருவெண்காட்டில் லாரி மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் கார் டிரைவர் பலியானார்.
இதுபற்றிய விவரம் வருமாறு-
லாரி மீது ஸ்கூட்டர் மோதல்
சீர்காழி அருகே உள்ள விளந்திடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்  சுதாகர் (வயது 32). கார் டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு தனது மனைவி ஊரான பூம்புகாருக்கு சென்று விட்டு, ஸ்கூட்டரில்  விளந்திடசமுத்திரத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
திருவெண்காடு சரபோஜி அக்ரஹாரம் பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென அந்த பகுதியில் பஞ்சுலோடு ஏற்றிக் கொண்டிருந்த லாரி மீது ஸ்கூட்டர் மோதியது.
கார் டிரைவர் பலி
இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி எறியப்பட்ட சுதாகர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். 
இதுகுறித்து திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்