அடுக்கம்பாறை அருகே விவசாயி வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
அடுக்கம்பாறை அருகே விவசாயி வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
அடுக்கம்பாறை
வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமம், புது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 43), விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 20 பவுன் நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
வெளியில் சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் நகைகள திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜேந்திரன் வேலூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.