ஆட்டோ டிரைவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ஆட்டோ டிரைவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 31). ஆட்டோ டிரைவரான இவரை முன்விரோதம் காரணமாக அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார், தங்கராஜ், சின்னகருப்பன், பழனிச்சாமி ஆகிய 4 பேரும் சேர்ந்து கம்பால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கருப்பசாமி சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் தங்கராஜ் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.