ஆத்தூர் விபத்தில் வடமாநில வாலிபர் பலி

ஆத்தூர் விபத்தில் வடமாநில வாலிபர் பலியானார்.

Update: 2021-06-24 16:35 GMT
ஆறுமுகநேரி:
ஜார்கண்ட் மாநிலம் பாகூர் மாவட்டம் இஸ்தோனாகர் பகுதியை சேர்ந்த மொன்ஷா கிஸ்கு என்பவரின் மகன் சுனில் கிஸ்கு(வயது 23). இவர் பழைய காயல் பகுதியில் அமைந்துள்ள சிர்கோனியம் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் நடைபெறும் கட்டிட வேலைக்கு வந்துள்ளார். இவரை நிறுவன மேலாளர் அன்பு ராஜா நேற்று காலையில் கம்பெனி வேலைக்காக மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தெற்கு ஆத்தூர் வந்துள்ளார். அங்கு பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் சிர்கோனியம் குடியிருப்பு நோக்கி புறப்பட்டு சென்றனர். ஆத்தூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள தியான மண்டபத்தின் முன்பு வந்தபோது எதிரே வந்த லாரி ஒன்று மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்களில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் கீழே விழந்த சுனில் கிஸ்கு  மீது லாரியின் பின்பக்க டயர் இரண்டும் தலையில் ஏறி நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் இறந்து போனார். ஆத்தூர் போலீசார் விரைந்து ெசன்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி சேர்வைகாரன்மடம் சுப்பிரமணியன் மகன் கண்ணன்(48) என்பவரை கைது செய்தனர். காயமடைந்த அன்புராஜா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

மேலும் செய்திகள்