உளுந்தூர்பேட்டை தோட்டக்கலை பண்ணையில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

உளுந்தூர்பேட்டை தோட்டக்கலை பண்ணையில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-06-24 16:26 GMT
உளுந்தூர்பேட்டை, 

கள்ளக்குறிச்சி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் உளுந்தூர்பேட்டை அருகே சாத்தனூர் வனப்பகுதியில் தோட்டக்கலை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பண்ணையை கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் உள்ள மா, பலா உள்ளிட்ட மரக்கன்றுகளை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து அதனை பராமரிக்கும் முறைகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்