குப்பை தொட்டியில் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை
குப்பை தொட்டியில் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனைக்குளம்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே என்மனம்கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட முருகானந்தபுரம் ரேஷன் கடை அருகே உள்ள குப்பைத்தொட்டியில் பிறந்து 3 நாட்கள் ஆன பெண் குழந்தை வெள்ளை துணியால் சுற்றப்பட்டு தொப்புள் கொடியுடன் இறந்து கிடந்தது. அந்த வழியாக சென்ற நபர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் நாகநாதன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாலகுருநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குப்பைத்தொட்டியில் கிடந்த குழந்தையின் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஆடிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.