விளாத்திகுளத்தில் மூதாட்டி தற்கொலை
விளாத்திகுளத்தில் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
விளாத்திகுளம்:
இலந்தைகுளம் மேலத்தெருவை சேர்ந்த உமையணன் மனைவி புஷ்பம் (வயது 69). இவர் தனது மகன் சந்திரன் வீட்டில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புஷ்பம் கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி வீட்டில் எலிமருந்தை சாப்பிட்டு மயக்கமடைந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புஷ்பம் உயிரிழந்தார். இது தொடர்பாக விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.