சாலை பணிகளை மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு

ஆலந்தூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் ஆய்வு செய்தபோது சாலையை உரிய அளவு தோண்டி எடுக்கப்பட்டதா? என்பதை ஆய்வு செய்தார்.

Update: 2021-06-24 04:26 GMT
ஆலந்தூர் 

சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் நடக்கும் சாலை பணிகள், மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி நேற்று திடீரென ஆய்வு செய்தார். ஆலந்தூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் ஆய்வு செய்தபோது சாலையை உரிய அளவு தோண்டி எடுக்கப்பட்டதா? என்பதை ஆய்வு செய்தார்.

பின்னர் சாலை 300 மீட்டர் தூரம் போடப்படுகிறதா? என்பதை அளந்து பார்த்த போது 260 மீட்டர் தான் இருந்தது. இது பற்றி 160-வது வார்டு பெண் உதவி என்ஜினீயரை அழைத்து விசாரித்தார்.

மாநகராட்சி டெண்டரில் கூறியபடி பணிகள் நடக்க வேண்டும். பணியை கவனிக்காமல் இருந்த பெண் உதவி என்ஜினீயரிடம் விசாரித்து அறிக்கை தரும்படி தென் சென்னை மண்டல துணை கமிஷனருக்கு அவர் உத்தரவிட்டார்.

பின்னர் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மழைநீர் கால்வாய்கள் தூர் வாரும் பணிகளையும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார். சாலை பணிகளை அளந்து ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடிக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்