காஞ்சீபுரத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 6 கடைகளுக்கு சீல்

காஞ்சீபுரத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2021-06-24 01:29 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து காணப்பட்டதால் பொது போக்குவரத்து உள்ளிட்ட சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பட்டு சேலை கடைகள், ஜவுளி கடைகளுக்கு தளர்வுகள் அளிக்கப்படாத நிலையில், விதிகளை மீறி காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் தனியார் பட்டு சேலை கடைகள் பொதுமக்களை பின்புற வாசல் வழியாக அனுமதித்து வியாபாரம் நடத்தி வருவதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்திக்கு வந்த புகாரின் அடிப்படையில், காந்திரோடு, பாவாபேட்டை, டி.கே.நம்பி தெரு உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி நகராட்சி ஊழியர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 6 பட்டுசேலை கடைகளுக்கு சீல் வைத்தும், 16 கடைகளுக்கு அபராதமாக ரூ.55 ஆயிரத்து 500 விதித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சேஷாத்திரி பாளையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் விதிகளை மீறி கூட்டம் கூடி திருமண நிகழ்ச்சி நடந்ததால் தனியார் திருமண மண்டபத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்