மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
திருச்சி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள்
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துணை மின்நிலையங்களிலும், உயர் அழுத்த மின்பாதைகளிலும் இன்று(வியாழக்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, ஆலம்பட்டி, செவந்தாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூர், பில்லுப்பட்டி, யாகபுரம், கல்லுபட்டி, பொருவாய், மருங்காபுரி, கருமலை, எண்டபுளி, மணியங்குறிச்சி, வேளக்குறிச்சி, கஞ்சநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
வையம்பட்டி
இதுபோல் வையம்பட்டி துணை மின் நிலையம் எ.ரெட்டியபட்டி மற்றும் மணப்பாறை துணை மின் நிலையம் செவலூர் மின்பாதைக்குட்பட்ட பகுதிகளில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வையம்பட்டி, இளங்காகுறிச்சி, ஊத்துப்பட்டி, ஆசாத்ரோடு, செவலூர், சங்கமரெட்டியபட்டி, கருப்பகோவில், குதிரைகுத்திப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் திருச்சி கிழக்கு கோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையங்களில் இன்று அவசர கால பணி நடைபெற உள்ளது. எனவே, அம்பிகாபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பாலாஜி நகர், கணேஷா நகர், ரோஜா தெரு, எல்லக்குடி, அண்ணாசாலை, வின் நகர் பகுதிகள். துவாக்குடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட துவாக்குடி தொழிற்பேட்டையின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள். திருவெறும்பூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட நேரு நகர், பூலாங்குடி, பழங்கனாங்குடி, எலந்தப்பட்டி, காந்தலூர், சூரியூர் பகுதிகள். அலுந்தூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கொட்டப்பட்டு, குமரப்பட்டி, கலிமங்கலம், குன்னத்தூர், சிகரம்பட்டி, சந்தனக்குறிச்சி பகுதிகள். அம்மாப்பேட்டை துணை மின் நிலையத்தில் அகில இந்திய வானொலி நிலையம், சமத்துவபுரம் பகுதிகள். அதவத்தூர் துணை மின் நிலையத்தில் போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு பகுதிகள் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மன்னார்புரம் செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம், சமயபுரம்
இதுபோல் ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட திருவடி தெரு, நேதாஜி தெரு, காந்தி ரோடு, நேரு தெரு, சத்தியமூர்த்தி தெரு, பட்டேல் ரோடு, ரங்கா நகர், ஈ.வி.எஸ். ரோடு, மல்லிகைப்பூ அக்ரஹாரம், ரோகிணி வாஸ்து கிராமம், கே.வி.எம்.சுவர்ணபூமி, எஸ்.வி.சாரி ரோடு, ஆர்.எஸ்.ரோடு, திருவானைக்காவல் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பிச்சாண்டார்கோவில், உத்தமர் கோவில், திருவள்ளுவர் அவன்யூ, கோகுலம் காலனி, ராயர் தோப்பு, கூத்தூர் கீழத்தெரு, டோல்கேட் ஹைடெக், செக்போஸ்ட், சமயபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சமயபுரம் மேற்கு, இனாம் சமயபுரம் ஆகிய பகுதிகளில் மின் பாதையில் உள்ள மரங்களை வெட்டுதல் மற்றும் மின்கம்பிகள் சரி செய்தல் பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படும் என்று ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.