சிவந்திபுரம் ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை

சிவந்திபுரம் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று முற்றுகையிட்டனர்.;

Update: 2021-06-23 20:41 GMT
விக்கிரமசிங்கபுரம்:
சிவந்திபுரம் ஊராட்சியில் 11 நாட்கள் ஆகியும் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்தும், சீராக குடிநீர் வழங்கக்கோரியும் அப்பகுதி மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

அப்போது அங்கு அதிகாரிகள் இல்லாததால் ஊராட்சி செயலர் வேலுவிடம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை தெரிவித்தனர். அதற்கு அவர், மோட்டார் பழுதாகி உள்ளதால் சரியாக குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக பழுதை சரிசெய்து குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்