நெல்லையில் மரக்கிளைகளை அகற்றிய மின்வாரிய ஊழியர்கள்

நெல்லையில் மரக்கிளைகளை அகற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Update: 2021-06-23 20:38 GMT
நெல்லை:
மழைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு, மின்சார வாரியம் சார்பில் மின்னோட்ட பாதைகளில் உள்ள மரக்கிளைகள் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று தொடங்கியது. நெல்லை நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துக்குட்டி தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் நெல்லை கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மரக்கிளைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் மின்கம்பங்களுக்கு இடையே உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்களில் சுற்றியுள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டன.

நெல்லை கொக்கிரகுளம் துணை மின்நிலையத்தில் நேற்று பராமரிப்பு பணி நடந்தது. இதில் மின்வாரிய ஊழியர்கள் கலந்துகொண்டு பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்