லாரி மோதி அரசு ஊழியர் பலி

லாரி மோதி அரசு ஊழியர் பலியானார்.

Update: 2021-06-23 20:05 GMT
பேரையூர்,ஜூன்.
சேடப்பட்டியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 56). திருமங்கலம் யூனியன் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று மாலை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆலம்பட்டி-சேடபட்டி சாலையில் எஸ்.மீனாட்சிபுரம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத லாரி, மணிவண்ணன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்