அமராவதி ஆற்றை ஆக்கிரமித்துள்ள முட்செடிகள்
அமராவதி ஆற்றை ஆக்கிரமித்துள்ள முட்செடிகள்
தாராபுரம்,
தாராபுரம் வழியாக செல்லும் அமராவதி ஆற்றுப் பாசனத்தின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களை சோ்ந்த பல லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஆற்று பாசனத்தின் மூலம் நெல், கரும்பு, தக்காளி, கத்தாிக்காய், பீட்ரூட் உட்பட பல்வேறு பயிா்களை விவசாயிகள் பயிாிட்டு வருகின்றனா்.
மேலும் இந்த ஆற்றின் மூலம் உடுமலை, தாராபுரம், மூலனூா், வெள்ளகோவில் மற்றும் கரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீா் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தாராபுரம் பழைய ஆற்றுபாலத்தின் அருகே ஆற்றின் மையப்பகுதி மற்றும் கரையோர பகுதிகளில் முட்புதர்கள் ஏராளமாக வளா்ந்து உள்ளன.
இதனால் அந்த பகுதியில் ஆற்றின் பரப்பளவு குறைந்து காணப்படுகிறது. அந்த பகுதியில் தண்ணீா் போக்குவரத்துக்கு தடை ஏற்படுகிறது. மேலும் சீமைகருவேல முட்கள் தண்ணீரை உறிஞ்சி கொள்வதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வறட்சி காலங்களில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுபோன்று சீமை கருவேல மரங்கள் உடுமலையில் இருந்து கரூா் வரை ஆற்றின் பல்வேறு பகுதிகளில் வளா்ந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாாிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அமராவதி ஆற்றில் வளா்ந்துள்ள சீமை கருவேல முட்புதர்களை அகற்ற வேண்டும் என தாராபுரம் பகுதி விவசாயிகள் கோாிக்கை விடுத்துள்ளனா்.