மதுபாட்டில்களுடன் 3 பேர் கைது

மதுபாட்டில்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-06-23 19:22 GMT
பேரையூர்,ஜூன்.
டி.கல்லுப்பட்டி போலீசார் ரோந்து சென்றபோது அங்குள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே வன்னிவேலம்பட்டியை சேர்ந்த முத்துக்காளை (வயது 35) என்பவர் விற்பனை செய்வதற்காக 50 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து முத்துக்காளையை கைது செய்தனர்.
இதேபோல் சந்தையூரை சேர்ந்த சக்கனண் (48) என்பவரிடமிருந்து 48 மது பாட்டில்களையும், கீழப்பட்டியை சேர்ந்த முத்தணன் (52) என்பவரிடமிருந்து 123 மது பாட்டில்களையும் பேரையூர் போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்