முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுரை

கொரோனா பரவலை தடுக்க முககவசம், சமூக இடைெவளியை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Update: 2021-06-23 19:17 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்றாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.

மேலும் செய்திகள்