சொந்த ஊருக்கு கொண்டுவிட சகோதரிகள் மறுத்ததால் வடமாநில சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.

சொந்த ஊருக்கு கொண்டுவிட சகோதரிகள் மறுத்ததால் வடமாநில சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.;

Update: 2021-06-23 19:00 GMT
பல்லடம்,
சொந்த ஊருக்கு கொண்டுவிட சகோதரிகள் மறுத்ததால் வடமாநில சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வடமாநில சிறுமி
 மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் கோவிந்தாபிஸ்வான். இவருடைய  மகள்கள் சரஸ்வதி (வயது 23), சுக்லா(21) மற்றும் ரூப்சாராணி (15). 
இதில் சரஸ்வதி, சுக்லா இருவரும்  பல்லடம் லட்சுமி மில் அருகே உள்ள தனியார் தொழிற்சாலை விடுதியில் தங்கியுள்ளார். இவர்கள்  இருவருக்கும் சமையல் செய்ய உதவியாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மேற்குவங்கத்திலிருந்து ரூப்சாராணியை அழைத்து வந்தனர்.
 ஆனால் அவருக்கு இங்கு தொடர்ந்து இருக்கப்பிடிக்க வில்லை. எனவே என்னை பெற்றோரிடம் கொண்டு விட்டுவிடுங்கள் என சகோதரிகளிடம் தொடர்ந்து கூறியுள்ளார். ஆனால் அவர்கள் பிறகு பார்க்கலாம் என்று காலம் கடத்தி வந்ததாக  கூறப்படுகிறது.
தற்கொலை
 இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் சகோதரிகள் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். ரூப்சாராணி மட்டும் தனியாக இருந்துள்ளார். பின்னர் மாலை வேலை முடிந்து விடுதிக்கு திரும்பிய சகோதரிகள் இருவரும் அறைக்கு சென்று பார்த்தபோது  ரூப்சாராணி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இருவரும் அக்கம் பக்கம் இருப்பவர்கள் உதவியோடு அவரை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிறுமி ரூப்சாராணியை பரிசோதித்த டாக்டர், அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்