மோட்டார் சைக்கிளில் மது கடத்திய 2 பேர் கைது
மோட்டார் சைக்கிளில் மது கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி அருகே தெத்துப்பட்டி பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்கள் கடத்தியதாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்கார்ட்டில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் செல்வம் (48), திண்டுக்கல் சிப்கார்ட்டில் வேலை செய்து வரும் பாண்டி (28) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த 121 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.