கொரோனா சிறப்பு மருத்துவ முகாமை அதிகாரி ஆய்வு
கொரோனா சிறப்பு மருத்துவ முகாமை அதிகாரி ஆய்வு செய்தார்.
தோகைமலை
தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடலூர் ஊராட்சியில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் ஏதேனும் உள்ளதா என்று பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இந்த முகாமை மாவட்ட உதவி இயக்குனர் விஜயசங்கர் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து, தளிஞ்சி ஊராட்சி அலுவலகங்களில் வளர்ச்சி பணிகளின் திட்ட பதிவேடுகளை மாவட்ட உதவி இயக்குனர் ஆய்வு செய்தனர். அதிகாரியின் ஆய்வின்போது, ஒன்றிய ஆணையர்கள் ராஜேந்திரன், குமரவேல், சுகாதாரத்துறையினர் உடனிருந்தனர்.