கொத்தடிமையாக இருந்த சலவை தொழிலாளி மனைவி, 4 குழந்தைகள் மீட்பு
மானாமதுரை அருகே கொத்தடிமையாக இருந்த கணவன்-மனைவி மற்றும் 4 குழந்தைகளை அதிகாரிகள் மீட்டனர். விசாரணையில் ரூ.50 ஆயிரம் கடனுக்காக 2½ ஆண்டுகளாக சம்பளம் இன்றி வேலை பார்த்தது தெரிய வந்து உள்ளது.
சிவகங்கை,
மானாமதுரை அருகே கொத்தடிமையாக இருந்த கணவன்-மனைவி மற்றும் 4 குழந்தைகளை அதிகாரிகள் மீட்டனர். விசாரணையில் ரூ.50 ஆயிரம் கடனுக்காக 2½ ஆண்டுகளாக சம்பளம் இன்றி வேலை பார்த்தது தெரிய வந்து உள்ளது.
கொத்தடிமையாக இருந்த குடும்பம்
இதை தொடர்ந்து அவனை மீட்ட குழந்தைகள் நல குழுவினர் அவனிடம் விசாரித்தபோது அவனுடைய தாய்-தந்தை மற்றும் தங்கைகள் உள்பட குடும்பமே மானாமதுரையை அடுத்த தீத்தன்குளம் கிராமத்தில் கொத்தடிமையாக இருப்பது தெரிய வந்தது.
மீட்பு
பின்னர் அவர்களை சிவகங்கையில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர். அவர்களுக்கு சிவகங்கை கோட்டாட்சியர் முத்துகழுவன் கொத்தடிமையில் இருந்து மீட்கப்பட்டதற்கான உத்தரவையும் ரூ.20 ஆயிரம் உதவி தொகையையும் வழங்கினார்.
இது குறித்து கோட்டாட்சியர் முத்துகழுவன் கூறியதாவது:-
ரூ.50 ஆயிரத்துக்காக...
சிவகங்கை தாலுகா பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த .சங்கையா(45), சலவை தொழிலாளியான இவருக்கு காளீஸ்வரி (35) என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
சங்கையா மானாமதுரை தாலுகா தீத்தான்குளம் பகுதியில் குணசேகரன் என்பவரிடம் பெற்ற ரூ.50 ஆயிரம் கடனை அடைப்பதற்காக குடும்பத்துடன் சம்பளம் இன்றி வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா காரணமாக வேலை இல்லாததால், காளையார்கோவில் தாலுகா காட்டுக்குடியிருப்பு பகுதியில் காந்தி என்பவர் குணசேகரனிடம் ரூ.50 ஆயிரத்தை கொடுத்து அழைத்துசென்று காட்டு குடியிருப்பில் சலவைத் தொழில் செய்வதற்கு வேலையில் அமர்த்தியுள்ளார். அங்கு அவருக்கு சம்பளம் எதுவும் கொடுக்காமல் வேலை வாங்கியுள்ளார்.
வீடு வழங்க ஏற்பாடு
அவர்கள் கடந்த 2½ ஆண்டுகளாக சம்பளம் இன்றி கொத்தடிமை தொழிலாளர்களாக இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களுக்கு தொழில் தொடங்க தேவையான சலவைபெட்டி மற்றும் குடியிருக்க வீடும் கலெக்டரின் உத்தரவின் பேரில் வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
2 பேர் கைது
இது தொடர்பாக காந்தி, சுப்பிரமணி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.