மகனுடன் மோட்டார் சைக்கிளில் வந்த பெண் கீழே தவறி விழுந்து சாவு

மகனுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண் வேகத்தடையில் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-06-23 18:12 GMT
குடியாத்தம்

மகனுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண் வேகத்தடையில் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக இறந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி நாகரத்தினம் (வயது 48). இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு நாகரத்தினம் தனது மகன் நடராஜனுடன் மோட்டார்சைக்கிளில் குடியாத்தத்தில் உள்ள மகள் தீபா வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். குடியாத்தம் அருகே கார்த்திகேயபுரம் கிராமம் அருகே வரும்போது இரவு நேரம் என்பதால் சாலையில் இருந்த வேகத்தடை தெரியவில்லை. 

இந்த நிலையில் வேகத்தடை மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியபோது பின்னால் அமர்ந்து வந்த நாகரத்தினம் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார்.  இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நாகரத்தினம் இறந்து விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்