மின்கம்பத்தின் மீ்து மோட்டார் சைக்கிள் மோதியதில் கட்டிட மேஸ்திரி சாவு
மின் கம்பத்தின் மீது மோட்டார்ரசைக்கிள் மோதியதில் கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.
சிப்காட் (ராணிப்பேட்டை), ஜூன்.24-
மின் கம்பத்தின் மீது மோட்டார்ரசைக்கிள் மோதியதில் கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பாறைமேடு பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 25), கட்டிட மேஸ்திரி. இவர், நேற்று முன்தினம் வாலாஜாவில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு வந்தார். பின்னர் சோளிங்கருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அம்மூரை அடுத்த மேல்வேலம் அருகே செல்லும் போது திடீரென நிலைத் தடுமாறி, சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த கஜேந்திரன் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----