பண்ருட்டியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
பண்ருட்டியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனா்.
பண்ருட்டி,
பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் பண்ருட்டியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அம்பேத்கர் நகரில் ரெயில் நிலையம் சைக்கிள் ஸ்டாண்ட் அருகில் 6 பேர் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முற்பட்டனர். அவர்களில் 3 பேர் மட்டும் போலீசில் சிக்கினர்.
அவர்களிடம் விசாரித்ததில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முனுசாமி மகன் பிரகலாதன் (வயது 30), முருகவேல் மகன் சிவா (47), கீழருங்குணம் ராதாகிருஷ்ணன் மகன் ராஜதுரை என்பது தெரியவந்தது. இதை யடுத்து அவா்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.
மேலும் தப்பி ஓடிய அம்பேத்கர் நகரை சேர்ந்த கண்ணன், சக்திவேல் மனைவி அஞ்சாலாட்சி, ஆர்.எஸ். மணி நகரை சேர்ந்த ஆனந்தராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.