பழ வியாபாரியை கம்பியால் குத்தியவர் மீது வழக்கு
பழ வியாபாரியை கம்பியால் குத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் புளிக்காரத்தெருவை சேர்ந்த மலைராஜன் மகன் முகேஷ் (வயது27). தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர் ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக அந்த வழியாக வந்த பாம்பூரணி செல்வராஜ் மகன் மதி என்பவர் முகேசை தாக்கியதோடு அருகில் கிடந்த கம்பியை எடுத்து குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து முகேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியை தேடிவருகின்றனர்.