கடன் தொல்லையால் மர வியாபாரி தற்கொலை
கடன் தொல்லையால் மர வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.;
வாடிப்பட்டி,ஜூன்.
வாடிப்பட்டி அருகே டி.மேட்டுப்பட்டி நாச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 58). மர வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் முருகன் குடும்பச் செலவுக்காக கடன் வாங்கியதாகவும், கொரோனா ஊரடங்கால் அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் காலையில் சிறுமலை வகுத்து மலை ஓனான் ஊத்து பகுதியில் உள்ள ஒரு மரத்தில் முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது சம்பந்தமாக அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின், சப்-இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.