ராமநாதபுரம்,
தமிழ்புலிகள் கட்சியின் தேனி மாவட்ட துணைசெயலாளர் திருநாவுக்கரசர் என்பவரை படுகொலை செய்த கந்து வட்டி கும்பலை கைது செய்ய வலியுறுத்தி ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்முருகன் தலைமை தாங்கினார்.
உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், அவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.