மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர்.

Update: 2021-06-23 16:23 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று தினமும் குறைந்து வருகிறது. எனினும் கொரோனாவுக்கு அவ்வப்போது உயிரிழப்பு ஏற்படுகிறது. 

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேடசந்தூரை சேர்ந்த 62 வயது முதியவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், கொடைக்கானலை சேர்ந்த 72 வயது மூதாட்டி அங்குள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையே நேற்று 2 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

மேலும் மாவட்டத்தில் நேற்று 5 பெண்கள் உள்பட 63 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்து 276 ஆனது. 


அதேநேரம் 125 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 420 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்