கோவை
கோவை மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் நேற்று 793 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 51-ஆக உயர்ந்தது.
இதுதவிர கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,488 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன் மூலம் மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 5 ஆயிரத்து 441-ஆக உள்ளது.
கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 7,654 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 25 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால், தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,956-ஆக உயர்ந்தது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்து 588 ஆக உயர்ந்து உள்ளது.
338 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 26 ஆயிரத்து 259 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 3 பேர் நேற்று இறந்தனர்.
1,175 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் உள்ள 340 ஆக்சிஜன் படுக்கைகளில் 184 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 156 படுக்கைகள் காலியாக இருக்கிறது.