திருவண்ணாமலை மாவட்டத்தில் 173 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 251 ஆக உயர்ந்துள்ளது.
இதில், 46,280 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது 1 ஆயிரத்து 394 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்று கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்தனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 577 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.