மேலும் 75 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தேனி:
தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்தது. தினமும் 700-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் படிப்படியாக பாதிப்பு குறைந்தது.
கடந்த சில நாட்களாக அன்றாட பாதிப்பு 100-க்குள் வந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 75 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 927 ஆக உயர்ந்தது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 128 பேர் நேற்று குணமாகினர்.
பாதிக்கப்பட்டவர்களில் 894 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 34 பேர் செயற்கை ஆக்சிஜன் சுவாசத்துடனும், 30 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்புக்கு 476 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டத்தில் இந்த வைரஸ் பாதிப்புக்கு நேற்று யாரும் உயிரிழக்கவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.